வெகு அழகாய் உருவம்
உலகை உள்வாங்கும் அறிவு
அவ்வறிவை வெளிப்படுத்தும் ஆற்றல்
பகைமை கொள்ளாத நேசம்
சார்ந்து விடாத பாசம்
ஆமாமாம்
என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்
கருத்தான விவாதங்கள்
அறிவு ததும்பும் நட்புகள்
பிறர்க்கு உழைக்கும் பேச்சுக்கள்
வெகுசிலரே படிக்கும் நூல்கள்
என்று என் உலகம்
மிகவும் உயர்ந்ததாய் இருக்கிறது !!
உதவி செய்யும் கரங்கள்
மன்னிக்கும் மனது
ஓயாத உழைப்பு
தாராள சிரிப்பு
ஆம் ...இந்தப் பெருமை அளப்பரியதாயிருக்கிறது.
நான் எனும் மூர்க்கம்
பாம்பைப்போல் சீற்றம்
தனிமை என்னும் பாரம்
உறுதி எனும் வாழ்வு
உயர்வு பெருமை வியப்பு ஏதுமில்லை
கண்கள் நிலைக்கிறது
வெளி, வெளி பெருவெளி
ஏதுமில்லாப் பெருவெளி
உலகம் நம்மை விரும்பும் முன் நாம் நம்மை விரும்ப வேண்டும்!
ReplyDelete:)
நானும் இப்போ உங்க பாலோயர்!
சாந்தி சாந்தி...
ReplyDeleteThank you Val and Vasanth..
ReplyDelete