கண்வழியே அசைந்தாடும்
இல்லாத கவிதைகள்
மனசுக்குள் கூத்தாடும்
புரியாத ராகங்கள்
உதடுகள் முணுமுணுக்கும்
விரல்கள் கீபோர்டில்
நில்லாது தாளமிடும்
காதோர குரலொன்று
விடாது ஆர்ப்பரிக்கும்
படைத்தலின் தாகம்
சந்தோஷ கூச்சலிடும்
ம்ம்
...பிறந்துவிட்டது கவிதை .
--
--
ம்ம் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் இதை .:) அழகு வெளிப்பாடு
ReplyDeleteசுப ஜனனம்!
ReplyDelete