உலகம் வேறு மாதிரி
இருக்க வேண்டுமென்று
எல்லோருக்கும் ஆசை
வெறுப்புகள் மறைய வேண்டுமாம்
அன்பு மலர வேண்டுமாம்
வாழ்வு செழிக்க வேண்டுமாம்
அமைதி நிலவ வேண்டுமாம்
உலகம் வேறுமாதிரி
இருக்க வேண்டுமென்று
எல்லோருக்கும் ஆசை
நிறைய பணமும் சொத்தும் வேண்டுமாம்
கடலில் கூட மண்ணைக்கொட்டி
நிலம் செய்து வீடு கட்டும்
வசதி வந்து சேர வேண்டுமாம்
உலகம் வேறுமாதிரி
இருக்க வேண்டுமென்று
எல்லோருக்கும் ஆசை
சாகாது இருக்க வேண்டுமாம்
நோயில்லாத உடல் வேண்டுமாம்
வலி என்பதே இல்லாதிருத்தல் வேண்டுமாம்
உண்மையை காணும் வகை வேண்டுமாம்
உலகம் வேறுமாதிரி
இருக்க வேண்டுமென்று
எல்லோருக்கும் ஆசை
எல்லோரும் சண்டை போடுகிறார்கள்
எல்லோரும் திட்டுகிறார்கள்
எல்லோரும் ரத்தம் சிந்துகிறார்கள்
எல்லோரும் சலித்துக்கொண்டே
ஏதேனும் செய்துகொண்டே இருக்கிறார்கள்
உலகத்தை மாற்றியே தீருவதென்று..
ஆமாமாம் .....
உலகம் வேறுமாதிரி
இருக்க வேண்டுமென்று
எல்லோருக்கும் ஆசை !!!
எதாவது செய்துகொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருக்க வேண்டும் தானே? .மாற வேண்டும் என்ற ஆசை உள்ளோருக்கு மாறிவிட்டு போகட்டும் . நாம் வாழ்வை அப்படியே எதிர்கொண்டு அதனுடன் போவோம்
ReplyDeleteஎல்லாரும் ஒரே மாதிரி நினைக்கலியே.. அதனாலதான் உலகம் இப்பவும் எப்பவும் அதே போல இருக்கு..
ReplyDeleteThank you Padma and Rishaban.
ReplyDelete