எதுவெல்லாம் கூடாதென்று
எழுதிவைத்தார்களோ
அவையெல்லாம் எனக்குத்
தவறாமல்
தேவைப்படுகிறது
நிறைய நேரங்களில் கோபம் தேவையாய் இருக்கிறது
குனிந்த தருணம் பார்த்து மிளகாய் அரைக்கும் ஜென்மங்களின் மீது
அவ்வப்போது காமமும் தேவையாய் இருக்கிறது
புருஷனின் தேவைக்கு பரிமாறவோ அன்றி,
காலத்தின் அரிப்புக்கு பதில் சொல்லவோ ...
ரகசியமாய் கொஞ்சமேனும் பொறாமை இல்லாவிட்டால்
முன்னேறித் தொலைவது எப்படி?
வம்பு பேசத் தெரியாத வாய்,
உலக விஷயம் மட்டும் எப்படி பேசிக் கிழிக்கும்?
கொஞ்சமேனும் சண்டை போட முடியாவிட்டால்
எல்லா தவறுக்கும் நான் மட்டுமல்லவா காரணமாகிப் போகிறேன்.
இவையெல்லாம் மட்டுமின்றி
கொஞ்சம் சாத்தான், கொஞ்சம் பேய்த்தனம்
கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் கலகம்
கொஞ்சம் வஞ்சம், கொஞ்சம் ஏய்ப்பு
என்று லிஸ்ட் போட்டு சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
ஆகையால்
எதுவெல்லாம் கூடாதென்று
எழுதிவைத்தார்களோ
அவையெல்லாம் எனக்குத்
தவறாமல்
தேவைப்படுகிறது
நல்ல பையனாய் வளரச்சொல்லி
முன்னோர் சொல்லித்தந்து
நானும் சொல்லி வந்த கதைகளையெல்லாம்
திரும்பப்பெற முடிவு செய்து விட்டேன் ..
ஆம் !
நல்ல ஆன்மாவென்று
பெயரெடுப்பதைக் காட்டிலும்
வாழ்ந்து விடுவது முக்கியமாகிறது.
ஆசைப்படியும், சாமர்த்தியமாயும்
வாழ்ந்து விடுவது
மிக மிக முக்கியமாகிறது...
எதிர் காலத்துக்கு விட்டுச்செல்லலாம்
ஆசைப்படி வாழ்வதே வாழ்வின் சித்தாந்தம் என்று,
சொல்லப்போகும் கதைகளை !
ஆகையால் .....
எதுவெல்லாம் கூடாதென்று
எழுதிவைத்தார்களோ
அவையெல்லாம் எனக்குத்
தவறாமல்
தேவைப்படுகிறது !!
Best one of you...enjoyed it very much...
ReplyDeleteWow!
ReplyDeleteஎதுவெல்லாம் கூடாதென்று
ReplyDeleteஎழுதிவைத்தார்களோ
அவையெல்லாம் எனக்குத்
தவறாமல்
தேவைப்படுகிறது !!
எதுவுமே தேவைதான்.. ஆனால் அளவும் இடமும் பொருத்து.. அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறார்கள்..
கவிதை பர்ஸ்ட் கிளாஸ்..
Thanks Adhusari.
ReplyDeleteThanks Rishaban.
அப்புறம் ரிஷபன் .....எல்லாவற்றையும் விடும்படி எழுதி வைத்ததுதானே, துருத்தும்படிக்கு வலியுறுத்தப்படுகிறது.
அதனாலேயே இப்படி ஒரு வெளிப்படுத்தல்.
Super kavithainka.. romba nalla irukku.. unkalukkul oru vairamuthu irukkar.. (inkay vairamuthuvai sollakaranam naan vairamuthu avarkalin rasikan enbathal thaan..!!)
ReplyDeletenalla irukku
ReplyDeleteMr. Selvakumar ...welcome to my pages.
ReplyDeleteAnd Thank you for leaving a nice comment.
Thanks Uma.
ReplyDelete