Friday, May 7, 2010

காத்திருப்பின் மேற்படிந்த சாம்பல்

இப்போதெல்லாம் காத்திருப்பதைத்தவிர

வேறு வேலையே இல்லை !!



பொழுது விடிவதற்கும்

பொழுது கவிவதற்கும்

காத்திருக்க வேண்டி இருக்கிறது



பசித்திருப்பதற்கும்

பசியின்றி இருப்பதற்கும்

காத்திருக்க வேண்டி இருக்கிறது



யாரேனும் ஜோக் சொல்வார்களா

சற்று சிரிக்கலாம் என்றேனும் ....

யாரேனும் புலம்புவார்களா

சற்று அட்வைஸ் செய்யலாம் என்றேனும் கூட

சில காத்திருப்புகள் கழிகிறது.



ஜோக்கோ, சிரிப்போ

புலம்பலோ, அட்வைசோ

இல்லை கடும் கோபமோ

எதுவாயினும் ....



அவையனைத்தும்

காத்திருப்பின் மேற்படிந்த

சாம்பலே,

எனும் உண்மையில்

எந்த மாற்றமும்

இப்போதைக்கு இல்லை.

3 comments:

  1. நீறு பூத்துருக்கு.உள்ள நெருப்பு இருக்கு தானே .

    ReplyDelete
  2. காத்திருத்தலே நெருப்பு !
    தேங்க்ஸ் பத்மா !

    ReplyDelete
  3. காத்திருந்தால் பலன் உண்டு என்றால்.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.. நல்ல கவிதைக்குக் கூட!

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!