Monday, March 15, 2010

நான்,..சின்ன சித்திரம்

எனக்காக எழுதுங்கள் ....

"மகிழ்ச்சியோடு என்றென்றும்" வாழ்ந்து முடிக்கும் கதைகளை

எனக்காக வரையுங்கள் ...

இடையழகும் , மார்பழகும் கொண்ட நவரச பதுமைகளை

எனக்காக செதுக்குங்கள் ...

இடை குறுகி, தோள் விரிந்த ஆணழகை ...

எனக்காக பாடுங்கள் ...

காதல் ததும்பும் பாடலொன்றை ..

எனக்காக செய்யுங்கள்

கலவி கொண்ட காதலினை

எனக்காக வாழ்ந்திடுங்கள்

குறைவில்லா வாழ்வதனை ....



முருங்கை வாழ்வு ..



இல்லாத இடையும், மார்பும்

கையெட்டாத ஆணும், அழகும்

சொட்டாத கலவி ரசமும்

கைவிட்ட வாழ்வே வாழ்வு .....

என் காலை வெட்டி நட்டுப்பார்த்தேன்

குழந்தை முளைக்கவில்லை.

மனதை வெட்டி மண்ணில் புதைத்தேன்

வாழ்வு முளைக்கிறது.


வளர்ச்சி குன்றிய மக்கள். இருபது வயதிலும் ஐந்து வயது உருவம்.
பிறப்பு உறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. மூளை மட்டும் அதன் தன்மையில் வளர்கிறது. பக்குவம் அடைகிறது.

பக்குவம் அடைய சிரமம் கொண்ட உயிர்கள் இயலாத வேதனையில் துடித்து, வன்முறையில் இறங்குவதை காட்டுகிற படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. ("orphan") அத்தகைய ஒருவரை நேரில் பார்த்து அருகில் இருந்த வாய்ப்பு கிடைத்த போது ....அவரின் உணர்வுகள் ..என் கை வழியே பாய்ந்தோடி இதயம் தொட்ட போது ....வழிந்த உணர்வுகளை பதித்துள்ளேன்.

6 comments:

  1. enakku pidithaa varigal ...
    "என் காலை வெட்டி நட்டுப்பார்த்தேன்

    குழந்தை முளைக்கவில்லை."

    ReplyDelete
  2. என் காலை வெட்டி நட்டுப்பார்த்தேன்

    குழந்தை முளைக்கவில்லை.

    மனதை வெட்டி மண்ணில் புதைத்தேன்

    வாழ்வு முளைக்கிறது. ////

    Wov...Beautifulll.... :)

    you are rocking buddy...!

    ReplyDelete
  3. Thanks Uma and Veliyoorkaaran.

    Mr. Veliyoorkaaran...I have been reading your blog. Thanks for your visit on mine. I couldn't find your mail-ID to personalize my thanks. ...Santhini

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கும்மா

    ReplyDelete
  5. சுள்ளென்ற கவிதை..

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!