Saturday, March 27, 2010

ஒன்றுபோல ... ஆனால் விசித்திரமான ...



எழுதுகிறோம் 
எழுதத்  தயங்குகிறோம் 
படிக்கிறோம் 
பொறுக்கிப்  படிக்கிறோம் 
தேடுகிறோம் 
அவ்வப்போது விடுகிறோம் 
கட்டுகிறோம் 
மீண்டும் தளர்த்துகிறோம் 

உன்னுள்ளும் ஆசை 
என்னுள்ளும் ஆசை 
உனக்கு என் மனம்  தொட 
எனக்கு உன் மனம் தொட 

எனக்கும் உண்மை பிடிக்கிறது 
சோம்பல் கொண்ட பொய்யும் பிடிக்கிறது 
எல்லாவற்றுக்கும் கேள்வியும் இருக்கிறது 
வாழப்போதுமான பதிலும் இருக்கிறது 
உன்னைப் போலவே ...

எங்கேயும் வழிகிற 
தெய்வதம் 
உன்னுள்ளும் வழிகிறது 
என்னுள்ளும் வழிகிறது 
நெகிழ்ந்து போன தருணத்தின் 
பரவச வார்த்தைகள் ....

எல்லாம் ஒன்று போல ....

ஆனாலும் உன்னை 
கண்கள் எப்போதும் நோக்கும் 
"விசித்திரமென"
"புரிய முடியா விசித்திரமென"  ...

(எழுத்தின் நோக்கம் புரிய தேவையான பின் குறிப்பு : எல்லோரும் ஒன்று போல என்கிற ஒருமை தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் எல்லோரும் பிரிந்து நிற்கிற முரண்.... )

2 comments:

  1. எல்லாரும் ஒன்று ஆயின் வேறு இதில் தானே இந்த பிரபஞ்சத்தின் அழகே
    தேடலுடன் கூடிய கவிதை

    ReplyDelete
  2. எங்கேயும் வழிகிற
    தெய்வதம்
    உன்னுள்ளும் வழிகிறது
    என்னுள்ளும் வழிகிறது
    தெய்வங்கள் கூட வெவ்வேறு குணாதிசயங்களுடன்.. அதனால்தான் அந்த முரண்!

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!