Saturday, May 1, 2010

இடைவிடாமல் ...


கற்றதை நினைவில் வைத்து 
மேற்கோள் காட்ட முடியவில்லை 

இலக்கியத்தின் 
தொலைந்த வார்த்தைகளை 
மீட்டெடுத்து 
கவிதை நயம் பின்னத் தெரியவில்லை 

உலகின் வன்மம் பார்த்து 
கோபம் கொள்ள முடியவில்லை 

உலகையே காப்பேன் என்று 
உறுதி பூண முடிவதில்லை ..


ஆயினும் எழுதத்துடிக்கும் 
விரல்களுக்குப்பின்னே 
மேகத்தின் பின் மறைந்த
சூரியன் போல் 

அன்பையும் வெறுப்பையும் தாண்டின 
ஏதோ ஒன்று 
ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது
இடைவிடாமல் ....

-- 

4 comments:

  1. அன்பையும் வெறுப்பையும் தாண்டின
    ஏதோ ஒன்று
    ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது
    இடைவிடாமல் ....
    அதைக் கண்டு பிடித்து விட்டோம் இல்லியா, இனி நம்மால் பிறருக்கு தொல்லை இல்லை! அருமையான வரிகள்.. வாழ்த்துகள்.. மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  2. Thanks Rishaban, for the right understanding.

    ReplyDelete
  3. இதுபோதும் .வேறென்ன வேண்டும் ?
    நல்லா வந்துருக்கு

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!