Wednesday, October 20, 2010

வாசமும் மோட்சமும்

கவிதைகளுக்கு நேரமில்லை .
இலக்கிய சேவைக்கும்,
இப்போது இடமில்லை

வளரும் நட்புகளின்
மனங்களின் வாசத்தில்
கவிதைகள் கரைகின்றன

நட்புகள்  மனம் படிக்க
விரைகின்றன.

எதுவாயினும்
பழைய காமிக்ஸ் புக்கின்
மயக்கும் வாசத்தைபோல
என் ப்ளாக் ம்
வாசம் வீசுகிறது...
விட்டுப்போன சில நாட்களுக்குள்ளாகவே.

மயக்கம் விரல்களின் வழி வழிந்து
கவிதையாகும்
மோட்சம்.



பழைய புத்தகத்திற்குள்
புதிய பேப்பர்
:)

7 comments:

  1. /* வளரும் நட்புகளின்
    மனங்களின் வாசத்தில்
    கவிதைகள் கரைகின்றன */

    :)

    /* பழைய புத்தகத்திற்குள்
    புதிய பேப்பர்
    :) */

    மாறாத மாற்றங்களுக்கு மாறும் வாழ்வு...

    ReplyDelete
  2. //
    வளரும் நட்புகளின்
    மனங்களின் வாசத்தில்
    கவிதைகள் கரைகின்றன
    //

    மனங்களின் வாசம்....இந்த சொல்லாடல் எனக்கு புதுசு. பல்வேறு கோணங்களை திறக்கிறது. யோசிச்சி எழுதுனீங்களா இல்லை தானா வந்த சொல்லா?

    ReplyDelete
  3. //
    எதுவாயினும்
    பழைய காமிக்ஸ் புக்கின்
    மயக்கும் வாசத்தைபோல
    என் ப்ளாக் ம்
    வாசம் வீசுகிறது...
    விட்டுப்போன சில நாட்களுக்குள்ளாகவே.
    //

    ஆமா. ஜூன்ல ஒரு போஸ்ட் எழுதிட்டு அக்டோபர்ல அடுத்த போஸ்ட் எழுதினா உங்க ப்ளாக் உங்களுக்கே மறந்திடும் :))

    ReplyDelete
  4. //
    பழைய புத்தகத்திற்குள்
    புதிய பேப்பர்
    ///

    இது நல்ல உருவகம். லைஃப்ஃபே அப்படித் தான இருக்கு? பழைய புத்தகத்தில் தினம் செருகப்படும் புதிய பேப்பர்.

    ReplyDelete
  5. @ அதுசரி /////மனங்களின் வாசம்....இந்த சொல்லாடல் எனக்கு புதுசு. பல்வேறு கோணங்களை திறக்கிறது. யோசிச்சி எழுதுனீங்களா இல்லை தானா வந்த சொல்லா?////
    என்ன பதில் சொன்னா, எனக்கு கிரெடிட் கிடைக்கும் ??
    Any way .....தானாய் தான் வந்தது. just in a flow.

    ReplyDelete
  6. Thank you Thusy, for visiting and commenting.

    ReplyDelete
  7. //வளரும் நட்புகளின்
    மனங்களின் வாசத்தில்
    கவிதைகள் கரைகின்றன//

    கரைதலையும் கவிதையாக்கலாமே!

    (அதுக்காக காக்காவை கூப்பிடச்சொல்லக்கூடாது)

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!