Tuesday, May 11, 2010

தற்செயலாய் ......

தற்செயலாய் தோன்றி


தற்செயலாய் சுழன்று

தற்செயலாய் கரையும்

இந்த பிரபஞ்சத்தின் ...



தற்செயலாய் பிறந்து

தற்செயலாய் வளர்ந்து

தற்செயலாய் இறக்கும்

மனிதம் .......


தற்செயல் குறித்து

சிந்திக்கவும் செய்கிறது

தற்செயலாய் ......

7 comments:

  1. தற்செயல் தான் என்றாலும் எதுவும் தற்செயல் அல்ல .every thing has a reason .
    நல்ல பதிவு

    ReplyDelete
  2. You seem pretty confident about "everything has a reason" I really like to know your view on this. Padma, Are you interested in the argument on this isssue?
    If you are,... please mail me ; santhinidevi@gmail.com

    ReplyDelete
  3. தற்செயலாய் இந்த பக்கம் வந்தேன்.. பத்மாவின் கருத்து எனக்கும் உடன்பாடே.. நிச்சயிக்கப்பட்டதே எதுவும்..

    ReplyDelete
  4. கவிதை நல்லாருக்கு...ஆனா, பத்மா சொன்ன மாதிரி எதுவும் தற்செயல் அல்ல...கயஸ் தியரியா கூட இருக்கலாம் :)))

    ReplyDelete
  5. Thanks Rishaban !
    Thanks Adhusari

    ReplyDelete
  6. எங்கோ நடக்கிற வினையும், அதை தொடர்ந்த விளைவும்தானே கேயாஸ் தியரி.
    எங்கோ நடந்த அந்த வினை.....விளைவு நிகழ வேண்டும் என்பதற்காகவே உண்டானதா? அல்லது வினை தற்செயலாக நடந்ததால் விளைவும் அதைதொடர்ந்து நிகழ்ந்ததா ?

    --To Adhusari

    ReplyDelete
  7. ""தற்செயலாகத்தானே"" இங்கே வந்தீர்கள் ரிஷபன்? :)

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!