Friday, April 16, 2010

அப்படியும் இப்படியும் எப்படியும் !!!

கொஞ்சம் இப்படியும் இருக்குமடி உலகம்


நெனைச்சு அப்படியும் இருக்குமடி உலகம்





எப்படியும் நடக்குமடி உலகம் -தெரிஞ்சும்

எப்படியும் நடக்குமடி உலகம் .





கோடு போட்டு நிக்காதடி உலகம்

பெரிய ரோடு போட்டும் போகாதடி உலகம்





புத்தனையும் பாத்ததடி உலகம்

பல சித்தனையும் பாத்ததடி உலகம்





ஏசுவோ, அல்லாவோ

ஹிட்லரோ, நீட்சேவோ

வீரப்பனோ, ஒபாமாவோ

நீயுமோ, நானுமோ...





அத்தனையும் பாக்குதடி உலகம் ....

அதையும் நிக்காம பாக்குதடி உலகம் ...





கயிறு போட்டு தண்ணியத்தான் கட்டப்பாக்குறான் -மனுஷன்

காத்த புடிக்க வலையத்தான் வீசிப்பாக்குறான் .





இல்லாத தூரத்த அளந்து பாக்குறான் -மனுஷன்

கைக்குள்ள அகிலத்த அடக்கப் பாக்குறான்





போற வழி வர்ற வழி போட்டு வைக்கிறான்-அதுவும்

திரும்பும்போதே மறைஞ்சு போக மலைச்சு போகுறான் ..









இப்படித்தான் இருக்கணும் ....

அப்படித்தான் இருக்கணும் ....

மனசு கெடந்து அடிக்குதடி

காலம் முழுசும் ....





இப்படின்னும் இல்லாம ...

அப்படின்னும் இல்லாம ...

எப்படியும் இருக்குதடி இந்த உலகம் ...

அதில ....

எப்படியும் இருந்துக்கடி காலம் முழுசும் ...

அகில ...

உலகத்தோடு ஒத்துப்போடி சாகும் வரைக்கும் .....

2 comments:

  1. எப்படியும் இருந்துக்கடி காலம் முழுசும் ...

    அகில ...

    உலகத்தோடு ஒத்துப்போடி சாகும் வரைக்கும்

    அகில உலகமும் அப்படித்தான் இருக்குதா?

    ReplyDelete
  2. அகில உலகமும் அப்படித்தான் இருக்குதா? ///

    அகில உலகமும் "அப்படித்தான்" இருக்கிறதாவென கேட்டு இருக்கிறீர்கள்.
    நான் சொல்வது அது மட்டும் அல்ல.

    நான் சொல்வது அகில உலகமும் "அப்படியும் , இப்படியும், எப்படியும் " இருக்கிறது என்பதாக. மேலோட்டமாய் பார்க்கும்போது விதிகள் இருப்பதாய் தோன்றினும் அதன் உள்ளுறை விதிகள் அற்றதாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இதற்கு முந்தைய கவிதையில் வரையறைகளும், விதிகளும் இல்லாத நிலை குறித்து எழுதினேன். ஆகவே விதிகள் இல்லாத உலகில் தன்னை விதிகளுக்கு உட்படுத்திக்கொண்டு மனிதன் செய்யும் முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிவதும் அதில் புலம்பி அழுது, தெய்வம், மதம், அறிவு, அறிவியல், அன்பு, உறவு என்று தேடி, தேடி களைத்து சலித்து .......................................
    ஆகவே எப்படியும் இருப்பது என்பது "தன்னால் முடிந்ததும், தனக்கு தெரிந்ததும் " அல்லது இயற்கை அதன் போக்கில் இருக்கிற இயல்பை புரிந்து கொண்டு அதன்போக்கிலேயே தன்னை அனுமதித்தல் - இயற்கை போலவே தன்னை வாழவிடுதல் என்பதாக விளங்கிக்கொள்ளலாம்.

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!