Thursday, June 17, 2010

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கவிதை

கவிதை தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்


கவிதைவரிகள்

பத்துபேருக்கு...

பத்துவிதமாய் புரிதலில்

கவிதை பல தளங்களில் வாழ்கிறது

கவிஞனின் எண்ணம் தாண்டியும்

வார்த்தைகள் பலவண்ணம்

கொள்ளும்போது

கவிதை தன் மோட்சத்தை அடைகிறது.

நேற்று படித்த ஞாபகம்.





இன்று ....

வரிகள் பத்தை பொறுக்கி எடுத்து

கலயம் தேடி குலுக்கிப் போட்டு

வரிசையாய் எடுத்து எழுதப்போகிறேன்

பலதளம் வாழும் கவிதை ஒன்றை.



பத்துபேர் பத்துவிதமாய் அர்த்தம் கொள்ள...



தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் கவிதைகளும்

தன்னைத்தானே வரைந்து கொள்ளும் ஓவியங்களும்

நன்றாகத்தான் இருக்கிறது.



வார்த்தைகள் தேடியும்

கருத்துகள் புனைந்தும்

ஏனிந்த கஷ்டம் ???

சந்தம் சொல்லும் வார்த்தைகளை

பொறுக்கிப்போடும்

சாப்ட்வேர் கிடைக்கட்டும்.

யோசிப்பது மிச்சமாகும் .







--

7 comments:

  1. //சந்தம் சொல்லும் வார்த்தைகளை

    பொறுக்கிப்போடும்

    சாப்ட்வேர் கிடைக்கட்டும்.

    யோசிப்பது மிச்சமாகும் . //

    இதுக்குமா சாஃப்ட்வேர்?

    வெளங்கும்...

    ReplyDelete
  2. விளக்கத்தை கூட கவிதை மாதிரி சொல்லிட்டிங்களே!

    ReplyDelete
  3. இப்படி கவிதை எழுதினா உணர்விருக்காது...

    இதுக்கு எதுக்கு சாப்ட்வேர்?
    ஆனா உங்க கவிதையில் ஒரு கவர்ச்சி இருக்குங்க.

    ReplyDelete
  4. Thank you Vasanth, Vaal paiyan and Karunakarasu

    ReplyDelete
  5. ////இதுக்குமா சாஃப்ட்வேர்?

    வெளங்கும்... /////

    கடைசில எல்லாத்துக்கும் சாப்ட்வேர் வந்துதான் வெளங்க வைக்கணும் பாருங்க.

    ReplyDelete
  6. ///-இதுக்கு எதுக்கு சாப்ட்வேர்?
    ஆனா உங்க கவிதையில் ஒரு கவர்ச்சி இருக்குங்க- ///

    கவர்ச்சிக்கு காரணம் ஆடையில்லாத உண்மையோ !!!
    உண்மைக்கு உணர்வு இல்லை என்பதும் உண்மையே !!!
    சுத்தறதுக்கு முன்னாடி நிறுத்திடறேன். :))

    ReplyDelete
  7. ////விளக்கத்தை கூட கவிதை மாதிரி சொல்லிட்டிங்களே! ////

    so ...அதுதான் விளக்கமா? Mr. 9 th Std.

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!