Thursday, April 15, 2010

சிரித்துக்கொண்டே இருக்கிறது ....

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......(கால நதி )

இதுதான் இலக்கியம் என ஒரு கூட்டம் 
இதுதான் மதம் என மறு கூட்டம் 

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இப்படித்தான்  வாழ்க்கை என ஒரு வழி 
அப்படித்தான்  வாழ்க்கை என மறு வழி 

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இதுதான் மனிதம் என ஒரு வழக்கு 
இது ஒரு மிருகம் என மறு வழக்கு ..

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

உனக்கு ஒரு நியாயம் 
எனக்கு ஒரு நியாயம் 
மற்ற அனைவர்க்கும் ஒரே நியாயம் ..

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

இது புனிதம் 
இது குப்பை 
இது மேதமை 
இது மடமை
இது கடவுள் 
இது சாத்தான் 
இது மோட்சம் 
இது நரகம் 
இது பாவம் 
இது புண்ணியம் 
இது கல் 
இது உயிர் 
நீ நீ ...
நான் நான் ... 

வரையறை இல்லா உலகில் ...
வரையறை கற்கும்  மனிதம் 
விதிகளே இல்லா வீதியில் 
விதிகளை விதிக்கும் மனிதம் ...

வரையறை இல்லாத உலகும் 
விதிகள் இல்லா நதியும் .......

சிரித்துக்கொண்டே இருக்கிறது ....

2 comments:

  1. இதெல்லாம் இருக்கட்டும் சொல்லுங்க விதியும் வரையறையும் வேணுமா?
    தேடல் இருக்கும் கவிதை

    ReplyDelete
  2. விதியும் வரையறையும் தேவையா தேவையில்லையா என்பதை நானோ நீங்களோ வரையறுக்க முடியாது, அதற்கான தேவை இருப்பதாக இயற்கை நினைக்கவில்லை.
    விதிகளும் வரையறைகளும் நிறைந்தது இவ்வுலகு என்ற மாயையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் என்கிற இயல்பை மட்டுமே என்னால் கண்டுணர்ந்து வெளிப்படுத்த இயலும்.
    இயற்கை அதன் போக்கில், அதன் பகுதியாய் நாம் அதன் போக்கிலேயே. Did I make it clear Padma? Sorry for the very late reply.

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!