Wednesday, June 23, 2010

சீதையின் பார்வையில் --- ராவணனும் அம்னீஷியாவில் விழுந்த மணி ரத்னமும்

இராவணன் -கதைச் சுருக்கம் - ராமாயணம்Just kidding.

போலீஸ் அதிகாரி (ராமன்) மனைவி சீதையை, வீரையா (சந்தன கடத்தல் வீரப்பன் / ராவணன் ) கடத்துகிறான். கண்டதும் காதல். கடத்துகிறான் கடத்துகிறான் ..கடத்திக்கொண்டே இருக்கிறான் மழைக்கால வனாந்திரம் முழுதும். வனங்களில் மக்கள். வீரையாவை விரும்பும் மக்கள். மேட்டுக்குடி மீது வீரையனின் கோபம், மற்றும் தங்கையின் மானபங்கம் மற்றும் இறப்புக்கான பழிவாங்கல். கடத்தி கொல்ல வேண்டிய தாரகை மீது காதல்.

சீதையை மீட்க ராமன் வருவதும், படையோடு வருவதும், அனுமார் துணையோடு வருவதும்.....தெரிந்த விஷயம். காதல் முற்றி சீதையை கொல்லாமலே....ராமனிடம் விட்டுப்போக ......அக்னிபரீட்சையை கருவியாக வைத்து ராவணனை கொல்லும்சிறு மாற்றம் மட்டும் ராமாயணத்தில் இல்லாத காட்சியாக அரங்கேறுகிறது.இது ராமாயண தழுவல் கூட இல்லை என்று மணிரத்தினம் சத்தியம் செய்தாலும் .......முதல் காட்சியிலிருந்து.....இராமாயண கதை மாந்தர்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு துவங்கி விடுகிறது.மணிக்கு அம்னீஷியா வந்ததால் விடுபட்ட இராமாயண காட்சிகளும், நியாயங்களும். சீதையின் பார்வையில்

அம்னீஷியா #1: ராமன் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை.

வில்லத்தனம் செய்யாத ராமனை என்ன காரணம் சொல்லி வெறுப்பது ?

ராமாயணத்தில் கூட அக்னிபரீட்சைக்குப்பிறகும் ராமனோடு இரண்டு குழந்தைகள் வேறு.

அக்னி பரீட்சைக்காகவெல்லாம் ராமனை வெறுக்க முடியாது.அம்னீஷியா #2: ராவணனும் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை, மேலும் எந்த ஹீரோத்தனமும் செய்யவில்லை. அவனை எதற்காக காதலிப்பது என்பது தெரியாமலே.....லவ் டயலாக்-ம் லுக் -ம் செய்ய விட்டா மணி-யை என்ன செய்வது.?

அவனது தங்கையை யாரோ கற்பு -அழித்ததற்கு ( கற்பு அழித்தலா, கர்ப்பம் அளித்தலா ? ...சின்ன சந்தேகம் ) சீனிலேயே வராத ராமன் மீது கோபம் கொண்டு, என்னை ஏன் தூக்கிவர வேண்டும்?

நான் அழகாய் இருப்பதாலா? சீனிலேயே வராத ராமன் மீது , எனக்கு மட்டும் எப்படி கோபம் வரும்? எனக்கு இராவணன் மேல் காதல் வரவேண்டும் என்றால், ராமனை வில்லனாக்க....வேண்டுமென்றே மறந்த மணியை என்ன செய்யலாம் ?

மேலும் கடைசிவரை என்னை தூக்கிவந்த காரணம் மட்டும் பிடிபடவே இல்லை.அம்னீஷியா #3 : சரி ராவணன் தான் ஹீரோ ஆயிற்றே... அவனுக்கு பத்துதலை பத்து ஆளுமை என்று பத்து பேரை விட்டு விளக்கம் சொன்னதுக்கு பதில் விக்ரமை கொஞ்சமாவது நடிக்க விட்டிருக்கலாமே.....டண்டனக்க, பக் பக் பக் பக் என்றெல்லாம் உளறாமல் கொஞ்சம் நடிப்பையாவது காட்ட வாய்ப்பு இருந்திருக்கும்.அம்னீஷியா #4 என்னை (சீதை) பார்த்தவுடன் "உசுரே போகுதே" என்று உருகும் இராவணன் -- நம்புவதற்கில்லை. இடைவேளைக்கு அப்புறம் உருகி இருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.அம்னீஷியா #5 மரத்துக்கு மரம் தவ்வும் அனுமார் கார்த்திக் : அய்யோ பாவம் ....இது ஒன்றே போதும் மணிக்கு என்னவோ ஆகிவிட்டது என்பதை காண்பிக்க.அம்னீஷியா #7 ஏன் கும்பகர்ண பிரபு தூங்க வில்லை?

8; ஏன் விபீஷணன் ராமனின் கட்சிக்கு தாவவில்லை?

9;ஏன் "ரோஜா " படம் போலவே சீதா இருந்த இடத்தை தேடி வந்த ராமன் தடவி பார்க்கிறான்?

10: ஏன் ரோஜா படம் போலவே கிளைமாக்ஸ் தொங்கு பாலம்?

11; மீசை இல்லாததாலேயே ப்ரித்வி ராமனா?

12: தீவிரவாதி என தேடப்படும் ராவணன் ....ஏன் கண் முன்னாள் ஏன் யாரையும் கொல்லவேயில்லை?

13: தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கிடைத்தபிறகும் விட்டு விட்டு .....என்னை மட்டும் கொள்ளப்போகிறேன் என்று பயமுறுத்திக்கொண்டே இருப்பது ஏன்?ராவணன் என்று பெயர் வைத்து ராவணனின் செயல்களை நியாயப்படுத்தவோ அல்லது சொல்லாத அந்த மனதை சொல்ல வேண்டும் என்றோ மணி ஆசைப்பட்டிருக்கும் தருணத்தில்....

அதற்கான வலிமை இல்லாது போய்விட்டது. ராமனை கெட்டவன் என்று காட்டாவிட்டாலும், ராவணனது காதலை வலிமை நிறைந்ததாய், தீவிரம் நிறைந்ததாய் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வலிமையையும் தீவிரமும் சீதையின் மனசில் தீயை பெருகி நிறைய வேண்டிய அவசியமும் இருக்கிறது. அதில் முழுமையாய் வெற்றி பெறவில்லை இந்த ராவண காவியம். புரியாத வசனங்கள் (ரெகார்டிங்) அழுத்தம் குறைந்த வசனங்கள் ( சுகாசினி ) -மேலும் பலவீனம்.இது ராமாயண தழுவல் என்று சத்தியம் சொல்லி மறுத்துக்கொண்டிருக்கும் மணி ரத்னம், ராமாயண கதாபாத்திரங்களை அளவுக்கதிகமாய் கதையில் உலவவிட்டு, அதன் உள்ளீட்டை நீர்த்துப்போக விட்டு விட்டார். ராவணனுக்கும் சீதைக்கும் நியாயம் செய்யப்படவில்லை.

இதற்கு "ராமன்" என்றே பெயர் வைத்திருக்கலாம்.மொத்தத்தில் ராமாயணத்தை அப்படியே விட்டிருக்கலாம். இவ்வளவு நேர மற்றும் பண விரயம்

தேவையில்லை.இத்தனைக்கு பிறகும் ............... ....மூன்று மணி நேரம் எப்படி பொழுது போனதெனில்.......என் கையில் இருந்த பனானா, ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியும்.......ஈரம் சொட்டும் பச்சை வனங்களும், மணியின் சொதப்பலை மீறி நடிக்கத் தெரிந்த நடிகர்களும், நல்ல இசையும்.

Sorry Mr. Mani Ratnam ----Next time ony DVD. Feel bad for Vikram as I watched him hoping for awards.

13 comments:

 1. சில எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். எனக்கும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிட்டது. மணி-போல

  ReplyDelete
 2. iyarkai katchi, music, matrum padalgal illaiyendral, padam padu boor thaan.. i missing the old mani rathinam.. i excepting the another one more flim like guru, thalapathi, roja.. but i really miss the mani rathinam making style in this flim

  ReplyDelete
 3. ஆஹா...ரெண்டு மணி நேர படத்துல வர்ற சீதைக்கே பதிமூணு கேள்வி இருக்குன்னா, ராமாயண சீதாவுக்கு எத்தனை கேள்வி இருந்திருக்கும்? :)))

  சீதா கேக்குற கேள்விக்கு ராவணனும் மணியும் என்ன பதில் சொல்வாங்கன்னு எனக்கு தெரியலை...பட், ராவணனோட வக்கீலா நான் வாதாட ட்ரை பண்றேன்..(ஃபீஸ் தந்துடுவாருன்னு நினைக்கிறேன்...)

  ReplyDelete
 4. //

  அம்னீஷியா #1: ராமன் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை.

  வில்லத்தனம் செய்யாத ராமனை என்ன காரணம் சொல்லி வெறுப்பது ?

  ராமாயணத்தில் கூட அக்னிபரீட்சைக்குப்பிறகும் ராமனோடு இரண்டு குழந்தைகள் வேறு.

  அக்னி பரீட்சைக்காகவெல்லாம் ராமனை வெறுக்க முடியாது.
  //

  சீதாவோட பார்வையில இது கரெக்ட்...ஏன்னா சீதாவுக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியாது. (எந்த மனைவிக்குத் தான் புருஷன் செய்றது எல்லாம் தெரியுது??)

  அக்னி பரீட்சை எல்லாம் அதுக்கப்புறம் வர்றது...ஸோ, இந்த கால கட்டத்துல சீதா ராமனை வெறுக்க எந்த காரணமும் இல்லை...

  ReplyDelete
 5. //

  அம்னீஷியா #2: ராவணனும் எந்த வில்லத்தனமும் செய்யவில்லை, மேலும் எந்த ஹீரோத்தனமும் செய்யவில்லை. அவனை எதற்காக காதலிப்பது என்பது தெரியாமலே.....லவ் டயலாக்-ம் லுக் -ம் செய்ய விட்டா மணி-யை என்ன செய்வது.?
  //

  காதலிக்க காரணம் எல்லாம் தேவையில்லை....இதுவெல்லாம் காரணம்னு பட்டியலா போட முடியும்?? (அன்னியன்ல அம்பி போடற மாதிரி தினம் மூணு வேளை குளிக்கிறேன், ரெண்டு வேளை பல்லு விளக்குறேன்னு லிஸ்ட் போடலாம்...பட், வொர்க்கவுட் ஆகாது..)

  ReplyDelete
 6. //

  அவனது தங்கையை யாரோ கற்பு -அழித்ததற்கு ( கற்பு அழித்தலா, கர்ப்பம் அளித்தலா ? ...சின்ன சந்தேகம் ) சீனிலேயே வராத ராமன் மீது கோபம் கொண்டு, என்னை ஏன் தூக்கிவர வேண்டும்?
  //

  அப்பிடில்லாம் ராமன் எஸ்கேப் ஆக முடியாது....ராமன் உத்தரவு பேரில நடக்கும் போது, எல்லாத்துக்கும் ராம் தான் பொறுப்பு...(ராமாயணத்துலயே சூர்ப்பனகை மூக்கை அறுத்தது லக்ஷ்மன் தான்..ராம் இல்ல...அங்க என்ன லாஜிக்கோ அதே லாஜிக் தான் இங்கயும்..)

  தூக்கி வந்ததுக்கு முக்கியமான காரணம்....டயரா இருந்தா உருட்டிண்டு வந்துரலாம்...பட், பாடின்னா தூக்கிண்டு தான வரணும்? :)))

  ReplyDelete
 7. //

  12: தீவிரவாதி என தேடப்படும் ராவணன் ....ஏன் கண் முன்னாள் ஏன் யாரையும் கொல்லவேயில்லை?
  //

  சாட்சி வச்சிண்டா கொல்வாங்க?? எந்த ஊர் நியாயம் இது??

  ReplyDelete
 8. //

  அம்னீஷியா #4 என்னை (சீதை) பார்த்தவுடன் "உசுரே போகுதே" என்று உருகும் இராவணன் -- நம்புவதற்கில்லை. இடைவேளைக்கு அப்புறம் உருகி இருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.
  //

  உருகறதெல்லாம் அப்பப்ப டைம் கிடைக்கிறப்ப உருகறது தான்...இதுக்காக டைம் புக் பண்ணியா உருக முடியும்?? :)))

  ReplyDelete
 9. நான் இன்னும் படம் பார்க்கலை...கமெண்ட்டெல்லாம் ச்சும்மா..ஜாலிக்கு...சீரியஸா எடுத்துக்காதீங்க...

  படம் பார்த்துட்டு அப்புறமா சீரியஸா :)) பதில் சொல்றேன்...

  ReplyDelete
 10. //

  13: தங்கையின் மரணத்துக்கு காரணமானவர்களை கிடைத்தபிறகும் விட்டு விட்டு .....என்னை மட்டும் கொள்ளப்போகிறேன் என்று பயமுறுத்திக்கொண்டே இருப்பது ஏன்?
  //

  அய்ய...அது ச்சும்மா ஜாலிக்கு "ஐம் கோயிங் டு கில் யூ"ன்னு சொல்றது...அதைப் போய் சீரியசா எடுத்துக்கிட்டா எப்படி??

  ReplyDelete
 11. இப்படியெல்லாம் எழுத மண்டையை குடைய வேண்டாமென்றே....சொதப்பலை பார்க்கவில்லை....

  ReplyDelete
 12. நான் இந்த படம் பார்க்கவில்லை!

  ஆனாலும் சில கேள்வி, நிச்சயம் ராமாயணத்துடன் ஒப்பிட்டு தான் இந்த படம் பார்க்க வேண்டுமா!?
  அடுத்து இப்படி தான் திரைக்கதை இருக்கும் என எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் போது சினிமாவை அதுவாகவே ரசிக்க முடியுமா!?

  ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!